×

தொற்று நோய் பரவும் அபாயம் உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,ஜன.8: கீரனூர் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே குப்பைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பின்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கோழிக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனை பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நல்லூர், மாத்தூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துபவர்கள் குப்பைகளை சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். குறிப்பாக மாத்தூர் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் குப்பைகள் கொட்டுகின்றனர்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஒதுங்கும் குப்பைகளை உரிய குப்பை தொட்டியில் போடாமல் தொடர்ந்து சாலையின் ஓரங்களில் கொட்டுகின்றனர். இதனை பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. அதனை அகற்றாததால் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அந்தபகுதியில் குப்பைகளை போடுவதால் காற்றில் பறந்து அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இப்படி கிடக்கும் குப்பைகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதனை கிளறி உள்ளே ஏதும் உணவு பொருட்கள் கிடைக்கும் என்று தேடுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள உலகமயமாக்கல், தொழில்நுட்பம், நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகளால் கைக்கடிகாரங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...