×

கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் புதுப்பிக்கும் பணி தீவிரம்

கந்தர்வகோட்டை,ஜன.8: உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அலுவலகங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது. கந்தவர்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று புதிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் புதியவர்கள், சிலர் பழைய தலைவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மூன்று வருடங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.தற்போது மீண்டும் தேர்தல் நடைபெற்று தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். முதல் கட்ட நடவடிக்கையாக ஊராட்சி மன்ற அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. வண்ண பெயின்ட்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தர்வகோட்டை ஊராட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்செல்வி உத்தரவின்பேரில் பெயின்ட்கள் அடிக்கப்பட்டு வருகின்றன.

Tags : Kandarwakottai Panchayat Office ,
× RELATED புதுக்கோட்டை உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்று நடும் விழா