×

வாக்காளர்களுக்கு வாழைக்கன்று கொடுத்து நன்றி தெரிவித்த தலைவர்

வேதாரண்யம், ஜன.8:தேத்தாகுடி வடக்கு ஊராட்சியில் வாக்காளர்களுக்கு வாழைக்கன்று கொடுத்து நன்றி தெவித்த பெண் ஊராட்சி தலைவர். வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி வடக்கு, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் விஜயாசோமசுந்தரம். பட்டதாரியான இவர் ஊராட்சி மன்றதலைவருக்குபோட்டியிட்டு 1,555 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் நேற்று பதவியேற்ற தலைவர் விஜயாசோமசுந்தரம் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று நன்றி தெரிவித்தார். அப்பொழுது தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வாழைக்கன்று கொடுத்து நன்றி தெரிவித்தார். நூதனமான இந்த நன்றி அறிவிப்பு பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. பல ஊர்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கறிவிருந்தும், குவாட்டரும் கொடுத்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் படித்த பட்டதாரியான விஜயா வாக்காளர்களுக்கு வாழைக்கன்று கொடுத்து நன்றி தெரிவித்து வருவது வாக்காளர்களையும், பொதுமக்களையும்  மகிழ்ச்சி அடைய செய்தது. அவருடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம மக்கள் உடன் சென்றனர்.

இது போல் ஆயக்காரன்புலம் 2ம் சேத்தியில் வெற்றிபெற்ற வேட்பாளர்  வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று தென்னை கன்றுகளை வழங்கி நூதன முறையில் நன்றி தெரிவித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சம்பா, தாளடி வயல்களில் புகையான்பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?டொல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள சம்பா,தாளடி நெல் வயல்களில் புகையான் பூச்சி மற்றும் நெல்பழ தாக்குதலை ஆய்வு செய்த வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறுகையில்,புகையான் பூச்சியின் தாக்குதலுக்கான காரணம் அதிகமான அளவில் தழைச்சத்து உரங்கள் இடுவது. வயலில் தண்ணீரானது அதிகமாக தேங்கி நிற்கும் சூழ்நிலைகள் மற்றும் மிகவும் நெருக்கமாக நடவு செய்யப்பட்ட வயல்கள் ஆகியவையாகும். புகையான் தாக்குதலின் அறிகுறிகளான பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை வரை நீடிக்கும்.இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் எண்ணிக்கையில் அதிகமாக அதாவது கூட்டங்கூட்டமாக தூர்களின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால் நெற்பயிர் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்.

தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் தண்டுப்பகுதியானது செயலிழந்து அதன் காரணமாக வலுவிழந்து ஒடிந்து இறுதியாக சாய்ந்து விடும் மேலும் தண்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசும். இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது வயல்களில் அரை வட்ட வடிவமாக பயிர் புகைந்தது போன்று ஆங்காங்கே திட்டு திட்டாகக் காணப்படும். கதிர்கள் பால்பிடிக்கும் பருவத்திற்கு முன்பே பயிர் காய்ந்து விடுவதால் மணிகள் உருவாவதும் தடைபடும். அல்லது கதிர் பதராகி விடும். இதன் தாக்குதல் 10 முதல் 7 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தூருக்கு ஒரு பூச்சி அல்லது ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி காணப்படும் இடங்களில் தூருக்கு இரண்டு பூச்சிகள் காணப்படும். புகையான பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளான புகையான பூச்சியைக் கட்டுப்படுத்த வயலில் தேங்கியுள்ள தண்ணீரைச் சுத்தமாக வடித்து விடவேண்டும். இழைச்சத்து உரங்கள் அளவுக்கு அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். தாக்கதலுக்குண்டான பயிர்களை பட்டம் பிரித்து வயலிலன் மற்ற பகுதிகளுக்கு புகையான பரவாமல் தடுக்க வேண்டும்.

நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக 5 சத வேப்பங்கொட்டைக் தெளித்து இதனைக் கட்டுப்படுத்தலாம்.புகையான பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான இமிடாகுளோர்பிட் 17.8 எஸ்.எல் அல்லது தயாமீதாக்ஸாம் 25 டபில்யூ.ஜி 40கிராம் அல்லது பிர்ரோனில் 5 எஸ்.சி:500 கிராம் அல்லது புயூர்ரொபேசின் 350மிலி இவற்றின் ஏதாவத ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் பயன்படுத்தி தூர்களில் அடிப்பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும். இரண்டு வகையான மருந்துகளை ஒன்றாக கலந்து தெளிக்க கூடாது. புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தி திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை செயற்கை பைரித்திராயாய்டுகள்,மீதையல் பாரத்தியான், குயினல்பாஸ்,போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags : voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...