×

உளுந்து விதை வாங்கி பயனடைய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கொள்ளிடம், ஜன.8: கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் உடனே உளுந்து விதை வாங்கி பயனடைய வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய விதை உளுந்து விற்பனையை துவக்கி வைத்து பேசுகையில், கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசூர், எருக்கூர், முதலைமேடு, கடவாசல் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் ஆடுதுறை3, வம்பன்6 ஆகிய சான்று பெற்ற ரக விதை உளுந்து 50 சதவிகித மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான தரமான விதை இருப்பு உள்ளதால் விவசாயிகள் உடனே வாங்கி பயனடையலாம் என்றார். வட்டார வேளாண் அலுவலர் விவேக், அத்மா திட்ட மேலாளர் ரேகா, கிடங்கு மேலாளர் திருமாவளவன், உதவி மேலாளர் பாலச்சந்திரன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...