×

மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க தெலங்கானா ஆளுநரிடம் மனு

மயிலாடுதுறை, ஜன.8: மத்திய அரசு ஒதுக்கிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைத்திட வேண்டும் என்று கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் கார்டுகள் அனுப்பியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், இருக்கின்ற வேளையில், மறுபுறம் மத்திய அரசின் ஆதரவை பெறுவதற்காக, அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக தமிழகத்தை சார்ந்தவரும், சக அரசியல் நண்பருமான தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேற்று முன்தினம் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் நேரில் சந்தித்து மயிலாடுதுறைக்கு மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும் என்பதற்கு தங்களுடைய உதவியை தாருங்கள் என்று கேட்ட கோரிக்கை மனுவை வழங்கினார்.மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரிய நடவடிக்கையும், பரிந்துரையும் செய்வதாக உறுதியளித்தார். தெலுங்கானா ஆளுநர் சௌந்தரராஜன். ஆளுநருக்கு கொடுத்த கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் 1சீர்காழி 2 மயிலாடுதுறை 3 பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாகை வடக்கு பகுதி ஆகும். நாகப்பட்டினம், கீழையூர் , வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி நாகை தெற்கு மாவட்ட பகுதியாகவும் தனித்து இயங்குகிறது. மேற்சொன்ன இரண்டு பகுதிகளுக்கும் இடையே பாண்டிச்சேரி மாநில பகுதி காரைக்கால் மாவட்டம், திருவாரூர் மாவட்ட பகுதி ஊடாக அமைந்து இயல்பாகவே, நாகை வடக்கு நாகை தெற்கு என்று இரண்டாக பிரிந்து அமைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசின் எல்லா நலத்திட்டங்களையும் தெற்கு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு வாஞ்சியூரில் மீன்வள பல்கலைக்கழகம், காமேஸ்வரத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை, வெள்ளப்பள்ளத்தில் ரூ.45 கோடியில் தானியங்கி தானிய சேமிப்புக் கிடங்கு, ஓரடியம்பலத்தில் மீன்வளக் கல்லூரி, திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய உள்ளன.ந நாகை மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட இக்கல்லூரி மயிலாடுதுறையில் அமைக்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல எங்கள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மாவட்ட கலெக்டரை தவறாக வழிநடத்தி நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் அமைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

ஏற்கனவே நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு என்று ஒரு மருத்துவக் கல்லூரி திருவாரூரில் அமைந்துள்ளது. அதன் தூரம் 20 கிலோமீட்டர் தான். அதேபோல நாகப்பட்டினத்தில் இருந்து வடக்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்காலில் மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. ஆனால் மயிலாடுதுறை பகுதியில் அதாவது நாகை வடக்கு மயிலாடுதுறை கோட்டத்தில் எந்த ஒரு மருத்துவக் கல்லூரியும் இல்லை. மக்கள் தங்களின் உரிய அவசர மருத்துவ சிகிச்சைக்காக 90 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் தஞ்சாவூருக்கோ அல்லது 60 கிலோமீட்டர் பயணம் செய்துதான் திருவாரூருக்கோ செல்ல வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள். மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைய எல்லா வசதிகளும் உள்ளன.முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரியையாவது மயிலாடுதுறை பகுதியில் அமைந்தால் 5 சட்டமன்ற தொகுதி மக்கள் சுமார் 15 லட்சம் பேர் பயனடைவார்கள்.  எனவே மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைத்திட ஆவண செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Governor ,Telangana ,Mayiladuthurai ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...