×

மாற்றுத்திறனாளிகள் முதியோர் வாழ்வாதார உதவித் தொகையை உயர்த்த வேண்டும்

மயிலாடுதுறை, ஜன.8: தமிழகத்தில் மாற்றுத்திறநாளிகளை வதைத்து கொடுமைப்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கியது வெட்கக்கேடானது என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. ஜான்சிராணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நம்புராஜன், பொருளாளர் சக்கரவர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, அமலாக்க நடவடிக்கைகள் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வெட்டி சுருக்கி ஏழைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ரயில்வே, ஏர் இந்தியா தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் அடாவடியான குடியுரிமைச் சட்டம் குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. ஆபத்தானவை என மாநில குழு கருதுகிறது. மத்திய அரசின் இப்படிப்பட்ட மோசமான ஒலிகளுக்கு எதிராகவும் மாற்றுத்திறனாளிகள் முதியோர் உள்ளிட்டோருக்கு வாழ்வாதார உதவித் தொகை குறைந்தபட்சம் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை விமானம் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடைகளாக கொடுக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து மாற்றுத்திறனாளிகளும் கடுமையாக பாதித்துள்ளது.

மேலும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் அடாவடியான குடியுரிமை சட்டம் குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது ஆபத்தானவை என மாநில குழு கருதுகிறது மத்திய அரசின் இப்படிப்பட்ட மோசமான கொள்கைகளுக்கு எதிராகவும் மாற்றுத்திறனாளிகள் முதியோர் உள்ளிட்டோருக்கு வாழ்வாதார உதவித் தொகை குறைந்தபட்சம் ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை இரு நூறு நாட்கள் ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜன 8 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது ஒரு தேசபக்தர் போராட்டமாக கருத சங்கத்தின் மாநிலக்குழு ஆதரிக்கிறது இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் நடத்தும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய மாநில குழு வேண்டுகோள் விடுக்கிறது.

100 நாள் வேலைசெய்த மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு ஐந்து மாதங்களாக ஊதியம் தரவில்லை மாற்றுத்திறன் சிறுமிகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கூட தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் நடத்தவேண்டிய மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 7 மாதங்களாக நடத்தப்படவில்லை இப்படி மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகளில் கூட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தமிழக அரசும் செயலற்று கிடக்கிறது இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நல்லாட்சிக்கான விருது தமிழக அரசுக்கு வழங்கி இருப்பது வெட்கக் கேடானது என மாநில குழு சுட்டிக்காட்டியுள்ளது இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது