×

கரூர் நகர பகுதியில் மண் பானைகள் வரத்து அதிகரிப்பு

கரூர், ஜன. 8: பண்டிகை நெருங்குவதால் பொங்கல் பானை வரத்து அதிகமாகி உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து உழவர்திருநாள், வீட்டுசாமி கும்பிடுதல் வழிபாடு என தொடர்ந்து விழாக்கள் வருகின்றன. புதுப்பானையில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபாடு செய்வது வழக்கம். இதனால் பொங்கலுக்கு மண்பானைகள் அதிக அளவில் வாங்குவார்கள். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மண்பானை விற்பனைக்காக வரத்து அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அந்த வாரம் முழுவதும் கிராமங்களில் தமிழர் திருநாள் விழாக்கள் நடைபெறுவதையொட்டி மண்பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். மண்பானைகள் விற்பனைக்காக கரூரின் பல பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. ஒருஜோடி பானை ரூ.150 முதல் விற்பனையாகிறது. பெரிய பானைகள் ரூ.250 வரை அளவுக்கு ஏற்ப விற்பனை செய்கின்றனர். மேலும் கறிவைக்கும் சட்டிகளும், குழம்பு வைக்கும் சட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வெளியூர்களில் இருந்தும் மண்பானைகள் அதிக அளவில் விற்பனைக்காக அடுத்த சில நாட்களில் கொண்டு வரப்படும் என வியாபாரிகள் தெரிவி

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...