×

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கரூர், ஜன. 8: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கைகள் சம்பந்தமாக 126 மனுக்கள் பெறப்பட்டன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரப்பெற்ற 126 மனுக்களை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.மேலும் இந்த முகாமில், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், சிறப்பு குறைதீர் நாள் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் குறித்தும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா