×

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

சத்தியமங்கலம், ஜன.8: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 211 கனஅடியாக குறைந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 108 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி பிரதான வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனம் என 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த நவம்பர் மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைக்கு 1000 கன அடியாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 504 கனஅடியாகவும், நேற்று காலை 211 கனஅடியாகவும் குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியில் நீடிக்கிறது. நீர் இருப்பு 32.8 டிஎம்சி யாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 9ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bhawanisagar Dam ,
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்