×

சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் மண்டல அலுவலகம் வந்த பெண்களால் பரபரப்பு

திருப்பூர், ஜன. 8: சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் முதலாவது மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குட்பட்ட காந்தி நகர், ஏ.பி.நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் மற்றும் உப்புத் தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், பொதுக்குடிநீர் குழாய்களில் அடிக்கடி சரியாக குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பலர் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், நேற்று காலிக்குடங்களுடன் மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 மேலும் அங்கு மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுக்குமார் இல்லாத நிலையில், அங்கிருந்த ஊழியர்களிடம் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யாததால், கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகவே, தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களும், உதவி கமிஷனர் வந்தவுடன், கோரிக்கைகள் குறித்து தெரிவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...