×

கோரிசோலா வனத்தில் கட்டிட கழிவு கொட்டுவதால் விலங்குகளுக்கு ஆபத்து

ஊட்டி, ஜன. 8:ஊட்டி அருகேயுள்ள கோரிசோலா வனப்பகுதியில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கில் வனப்பகுதிகளுக்குள் அத்து மீறி வாகனங்கள் செல்லவும், வனங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் தொடர்ந்து குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கழிவுகளை வனங்களில் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமின்றி, சதுப்பு நிலங்கள் பாதிப்படையும். நாளடைவில் தண்ணீர் பிரச்னை எழ வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட கோரிசோலா பகுதியில் சிலர் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரங்களில் உள்ள வனங்களில் கொட்டி வருகின்றனர். இப்பகுதியில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால், கோரிேசாலா அணை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள அரிய வகை தாவரங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், கண்ணாடிகள், ஆனி போன்ற பொருட்கள் இந்த கழிவுகளில் சிதறி கிடப்பதால், இதனை மிதித்து செல்லும் வன விலங்குகளுக்கு காலில் காயம் ஏற்படுவது மட்டுமின்றி, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவது தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Corosola Forest ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி