×

நீலகிரி உயிர்கோள இயற்கை பூங்காவை பாதுகாக்க கோவையில் 25ம் தேதி நிதி திரட்டும் நிகழ்ச்சி

கோவை, ஜன. 8: கோவை அருகே ஆனைகட்டியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ‘நீலகிரி உயிர்கோள இயற்கை பூங்கா’ சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதை, பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு கமிட்டி தலைவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், துணை தலைவர் விஜய்மோகன், செயலாளர் ரங்கசாமி, மற்றும் நந்தினி ஆகியோர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஆனைகட்டியில் இயற்கை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவில் 450 வகைக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. 100 வகைக்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள், 350 வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 80 வகைக்கும் மேற்பட்ட ஊர்வன, 31 வகைக்கும் மேற்பட்ட நீர்நிலை வாழ் உயிரினங்கள், 39 வகைக்கும் மேற்பட்ட மீன் இனங்கள், 316 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 3,300 வகை தாவரங்கள் என அரிதான வனப்பகுதியாக இது உள்ளது. இதை, பாதுகாத்து பராமரிக்க, ஐந்து கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இதற்கு நிதி திரட்டும் வகையில், ‘ஊ.. லா.. லா..’ என்னும் இசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. பிரபல கலைஞர்கள் ஹரிசரண், ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் உள்பட பலர் பங்குபெறுகின்றனர். டிவி புகழ் முகின் ராவ் கலந்து கொள்கிறார்.

Tags : fundraising event ,Nilgiris Biosphere Reserve ,
× RELATED சுற்றுலா பயணிகளின் கேம்ப் பயரால்...