×

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவர்கள் இன்று விடுப்பு எடுக்க தடை

கோவை, ஜன. 8: அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் இன்று விடுப்பு எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பு எடுக்கும் மருத்துவர்களின் விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையத்திற்கு மாற்ற கூடாது. அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இன்று பொதுவேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் மருத்துவர்களின் விவரங்களை திரட்ட வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அளித்துள்ள உத்தரவில், “8ம் தேதி மருத்துவர்கள் யாருக்கும் எந்தவிதமான விடுமுறையும் அளிக்க கூடாது. அனைவரும் பணிக்கு வரவேண்டும். மேலும், விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் குறித்த விவரங்களை திரட்டி மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கம் பங்கேற்கவில்லை என சங்கத்தின் செயலாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Government doctors ,
× RELATED மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி...