×

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16 குழந்தை தொழிலாளர் மீட்பு

கோவை, ஜன. 8: கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 500 நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதில் அங்கு குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 16 பேரை மீட்டனர். இதில் 3 பெண் குழந்தைகளும், 13 ஆண் குழந்தைகளும் அடங்கும். இது குறித்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனங்கள், கடைகள், தொமிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தேவையான கல்வி அளித்து வருகிறோம்.

இதற்காக கோவை மற்றும் திருப்பர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. கோவையில் கடந்த ஆண்டு 15 வயதிற்கு கீழ் உள்ள 16 குழந்தை தொழிலாளர்களை மீட்டு உள்ளோம். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள் 40 பேரை மீட்டு உள்ளோம். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் வெள்ளலூர், சேத்துமடை, நெகமம், ஆகிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் உள்ளன. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : child labor recovery ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...