தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்

ஈரோடு, ஜன.8:  ஈரோட்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. கூட்டத்தில், கல்வி மாவட்ட அலுவலர்கள் மாதேசன், செந்தில்குமார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மட்டுமின்றி திருப்புதல் தேர்வில் மாணவ,மாணவிகள் பெற்ற மதிப்பெண், கல்வி தரம், பாடம் வாரியாக மாணவ, மாணவிகளின் தரம் குறித்து அறிக்கை பள்ளிகள் வாரியாக கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதில், கோபி, பவானி, சத்தி கல்வி மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலையிலும், மதியம் ஈரோடு, பெருந்துறை கல்வி மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தின் இறுதியில், பாட வாரியாக தேர்ச்சி விகிதம், பாட வாரியாக குறைந்த மதிப்பெண், அதற்கான காரணங்கள், மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags : Study meeting ,head teachers ,
× RELATED தலைமை ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வு ஆலோசனை