×

திருச்சுழி பகுதியில் நெற்பயிரை நாசப்படுத்தும் ஆணைக்கொம்பன் ஈக்கள் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

திருச்சுழி, ஜன. 8: திருச்சுழி பகுதியில் நெல்பயிரில் ஆணைக்கொம்பன் ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து ரெட்டியபட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் துரைக்கண்ணம்மாள் விடுத்துள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியிலுள்ள நெல்பயிரில் தற்போது ஆணைகொம்பன் ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. மேகமூட்டத்துடன் கூடிய சாரல் தூறல், தொடர் மழைக்கு பிந்தைய காலகட்டம் இந்த ஈக்களின் பெருக்கத்திற்கு காரணம். இந்த ஈக்களின் புழு, வளரும் தூர்களை தாக்குகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கிறது. ஈக்கள் தாக்கிய இத்தூர்கள் பார்ப்பதற்கு யானை தந்தம் போன்று இருப்பதால் இதற்கு ஆணைக்கொம்பு என்று பெயர். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்

Tags : Agriculture Department ,Trichy ,
× RELATED வறட்சியிலிருந்து பயிர்களை...