×

பைக் மீது சொகுசு கார் வேகமாக மோதியதில் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பலி

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (32). இவருடைய நண்பர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (34). ஆவடி சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வந்த  இவர்கள், பரங்கிமலை ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பட்டாலியனிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில், கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக இருவரும் பைக்கில் சென்றனர். ரவீந்திரன் பைக்கை ஓட்டி சென்றார். திருமங்கலம் கலெக்டர் நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் இவர்களின் பைக் மீது மோதியது. இதில் காவலர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் காவலர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலரான கார்த்திக் ஆபத்தான நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருமங்கலம் போலீசார், விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அம்ரத் (25) என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காரில் நான்கு கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். இவர்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள தங்களுடைய நண்பர் ரோகித் சூர்யாவின் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு, நொளம்பூரில் உள்ள வருண் சேகர் என்பவர் வீட்டுக்கு வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது….

The post பைக் மீது சொகுசு கார் வேகமாக மோதியதில் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ravindran ,Ramanathapuram district ,Karthik ,Udumalaipet ,Avadi Sivashakti Nagar ,
× RELATED அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்