இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாடானை, ஜன. 8: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள சேந்தனி கிராமத்தில் வசிப்பவர் நாகநாதன் (25). இவரது மனைவி பூமதி (22). இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாமியார் வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் பூமதி தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென கணவரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு நாகநாதன் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பூமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Teenager suicide ,
× RELATED ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு