×

தமிழ்பாடி ஊராட்சி தலைவர் பதவியேற்பு

திருச்சுழி, ஜன. 8: திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள தமிழ்பாடி ஊராட்சிக்கான தலைவர் தேர்தலில், அதே ஊரைச் சேர்ந்த இருளன் போட்டியிட்டார். இவர், 1602 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 491 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருளன் பதவியேற்பு விழா, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் தினேஷ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின் ஊராட்சி தலைவர் இருளன், வார்டு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, காளீஸ்வரி, சங்கரேஸ்வரி, இளையராஜா, ராஜாத்தி, பெரியழகன், முத்துராமலிங்கம்மாள், பஞ்சு, சின்னழகு ஆகியோருக்கு பதவி பிரம்மாணம் செய்து வைத்தார்.

Tags : President ,Nadi Panchayat ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...