×

அறிவியல் கண்காட்சி

அருப்புக்கோட்டை, ஜன. 8: மத்திய  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் மாவட்டந்தோறும் தேசிய  அறிவியல் அருங்காட்சியக குழுமத்தின் மூலம் ‘உலாவும் அறிவியல் கண்காட்சி’  நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கண்காட்சி  நடக்கிறது. இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள இக்ரா மெட்ரிக்  பள்ளிக்கு இந்த உலாவும் அறிவியல் கண்காட்சி ஊர்தி வந்தது.இதில்  அன்றாட வாழ்வில் பயன்படும் இயந்திரங்கள் பற்றிய விளக்கங்கள்,  இயந்திரங்களின் மாதிரியுடன் விளக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஊர்தியை இக்ரா மெட்ரிக் பள்ளி  முதல்வர் ஷேக்மகபுப் வரவேற்றார். இந்த கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Tags : Science Exhibition ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி