×

மயிலாடும்பாறையில் புதருக்கு நடுவில் அரசு கட்டிடம்

வருசநாடு, ஜன.8: மயிலாடும்பாறையில் புதர் மண்டி அரசு பட்டு பண்ணை கட்டிடம் வீணாகி வருகிறது. மயிலாடும்பாறை கிராமத்தில் அரசு சார்பில் பட்டு பண்ணை இயங்கி வருகிறது. இங்கு 5க்கும் மேற்பட்ட பட்டு பண்ணை அலுவலர் தங்கும் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றியும் புதர்கள் மண்டி பாம்புகள் வாழும் கூடாரமாக மாறி விடுகிறது. இதனால் புதிதாக பொறுப்பேற்று வரும் பட்டுப்பண்ணை அலுவலர்கள் குடியிருப்பில் தங்குவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். சிலர் கிராமத்தில் வாடகைக்கு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் மழைக்காலங்களில் அதிக அளவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மிகவும் கவனத்துடன் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த முனியாண்டி கூறுகையில், புதர்கள் அதிகரிப்பின் காரணமாக இக்கட்டிடத்தில் தங்குவதற்கு பட்டு பண்ணைஅதிகாரிகள் முன்வருவதில்லை. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இதுபோன்ற கட்டிடங்களை பராமரிப்பு செய்யவும் புதர்களை அகற்றவும் வேண்டும். இல்லையெனில் இப்பகுதி பாம்புகள் வாழும் கூடாரமாக மாறி விடும். இதை தடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Government building ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...