×

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் கூட்டுறவு தணிக்கைத்துறை சங்கம் வலியுறுத்தல்

தேனி, ஜன.8: தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநில மத்திய செயற்குழு மற்றும் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரா.செல்வபாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கணேசன் வரவேற்றார். இதில் மாநில கவுரவத் தலைவர் செல்வம், நிறுவனத் தலைவர் கோவிந்தராசன், முன்னாள் பொதுச் செயலாளர்கள் பச்சையப்பன், ஜோதிராஜ், செல்வராஜ், மாரியப்பா ஆகியோர் கூட்டத்தை வாழ்த்தி பேசினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ப.சண்முகசுந்தரம் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியலை விரைந்து அங்கீகரிக்க வேண்டும்
எனவும், கூட்டுறவு தணிக்கைஉதவி இயக்குநர் நேரடி நியமனத்திற்காக அரசால் 8 காலிப்பணியிடங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணை 811ன் படி மதிப்பீடு செய்யாமல் 6 பணியிடங்கள் அதிகமாக நேரடி பணியிடமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று தணிக்கை உதவி இயக்குநராவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை மறுபரிசீலனை செய்து, நேரடி நியமனத்திற்கான தணிக்கை உதவி இயக்குநர் காலிப்பணியிடத்தை குறைக்க வேண்டும், வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பணிக்கு செல்லும் தணிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எவ்வித உச்சவரம்பின்றி பயணப்படி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது