×

சிவகங்கையில் புத்தக திருவிழாவிற்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பு

சிவகங்கை, ஜன. 8: சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நான்கு நாட்கள் நடைபெறும் குழந்தைகள் புத்தக திருவிழாவிற்கு சிவகங்கை நகர் மக்களை வெற்றி பாக்கு வைத்து அழைத்தனர். சிவகங்கை வியான்னி மகாலில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நாளை (ஜன.9) முதல் ஜன.12 வரை நான்கு நாட்கள் குழந்தைகள் புத்தக திருவிழா நடக்க உள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் துவங்கி வைக்கிறார். இதில் குழந்தைகளுக்கான தமிழ், ஆங்கிலம், பல வண்ணக்கதை, பாடல், அறிவியல் புத்தகங்கள், கோளரங்கம், ஸ்கை வாட்ச் உளளிட்டவைகள் இடம் பெற உள்ளன. இந்த விழாவிற்கு சிவகங்கை மக்களை அழைக்கும் வகையில் அறிவியல் இயக்கத்தினர் அரண்மனைவாசல், மதுரை முக்கு, சாஸ்திரி நகர், பஸ் ஸ்டாண்ட், காந்தி வீதி, நேரு பஜார் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தனர். இந்நிகழ்ச்சியில் புத்தக திருவிழா பொறுப்புக்குழு நிர்வாகிகள் சாஸ்தாசுந்தரம், புத்தக திருவிழாக்குழு தலைவர் காளிராசா, சங்கரசுப்பிரமன், சங்கரலிங்கம், சரவணபாண்டி, பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், கங்கை கருங்குயில் கலைக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Tags : Book Fair ,Sivaganga ,
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!