×

தொண்டி பேரூராட்சியில் பாழடைந்து கிடக்கும் ஆய்வு மாளிகை பராமரிக்கப்படுமா?


தொண்டி,  ஜன. 8:  தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆய்வு மாளிகை அரசு மேல் நிலைப்பள்ளி  எதிரே உள்ளது. இந்த கட்டிடம் கடந்த சில வருடங்களாக எவ்வித பயன்பாடும்  இல்லாமல் முள் புதர்கள் வளர்ந்து பாழடைந்து உள்ளது. இதை சரி செய்து நூலகம்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆய்வு மாளிகை  கட்டிடம் கூட்டங்கள் நடத்தவும், அதிகாரிகள் பேரூராட்சியின் செயல்பாடுகளை   ஆய்வு செய்வதற்கும் பயன்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக இந்த  கட்டிடத்தில் எவ்வித பணியும் நடக்காமல் பேரூராட்சியின் பழைய பொருள்களை  போட்டு வைக்கும் அறையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இரண்டு வருடமாக  எவ்வித பயன்பாடும் இல்லாமல் முள் புதர்கள் வளர்ந்து பாழடைந்து உள்ளது.  இக்கட்டித்தின் எதிரே செய்யது முகம்மது அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளதால்  எவ்வித பய்னபாடும் இல்லாமல் இருக்கும் கட்டிடத்தை நூலகமாக மாற்றினால்  மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் தொண்டியில் உள்ள நூலகம் வாசகர்கள் அதிகம்  செல்லாத பகுதியில் இருப்பதால் இதனை மாற்றுவதன் முலம் பொதுமக்களும்  பயனடைவார்கள். அதனால் பேரூராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமுமுக  மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியதாவது,  நூலகத்திற்கு மாற்று இடம்  கிடைக்காமல் வாசகர்கள் இல்லாமல் நூலகம் பூட்டியே கிடக்கிறது. தற்போது  பள்ளிக்கூடம் அருகில் பயனற்று கிடக்கும் கட்டிடத்தை நூலகமாக மாற்றினால்  மாணவர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். மாவட்ட நிர்வாகம் இது குறித்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : study house ,Thondi Baroratchi ,
× RELATED தமிழகம் மாளிகைக்கு செல்லும் வழியில்...