×

கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட மயானத்தில் கருவேலம் ஆக்கிரமிப்பு

கீழக்கரை, ஜன.8:  கீழக்கரையில் உள்ள மயானத்தில் வளர்ந்துள்ள சீமை காட்டு கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அங்கு கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் மயானம் முழுவதும் சீமை காட்டு கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.  இறந்தவர்களின் உடலை உள்ளே எடுத்து செல்வதற்கு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் மயானத்தின் பின்புறம் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மக்களால் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கொசுத்தொல்லையாலும் மற்றும் இவ்வழியாக நடந்து செல்லும் மக்களும் நாற்றத்தில் நடந்து செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து இருளப்பன் கூறுகையில், இந்த மயானம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் முழுவதும் கருவேல மரங்கள் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர்ந்து கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு உள்ளே தூக்கி செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் குப்பைகள் மாதக்கணக்கில் அகற்றாமல் கிடப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வீட்டில் நிம்மதியாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தூங்குவதற்கு முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கருவேல மரங்களை அகற்றவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : suburbs ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்