×

வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, ஜன.8: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது. தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்ெநறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் இனைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது. முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலை தேடும் இளைஞர்களின் கல்வி தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்கின்றன.

இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை தேடுபவர்களும், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்து விட்டு, வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு, தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜன.10ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.

Tags : Employment Camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்