×

29 பகுதிநேர ரேஷன் கடைகள் மூடல்

சென்னை, ஜன. 8: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக கொறடா சக்கரபாணி (ஒட்டன்சத்திரம் தொகுதி) துணை கேள்வி எழுப்பி பேசினார். அப்போது, அவர், “ஒட்டன்சத்திரம் தொகுதியில் 29 பகுதிநேர ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. சொந்த கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படவில்லை” என்றார். இதற்கு பதில் அளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “திறக்கப்பட்ட எந்த கடையும் மூடப்படவில்லை. எனவே ஆதாரமற்ற புகார்களை தெரிவிக்க கூடாது. உறுப்பினர் அதுதொடர்பான தகவலை கொடுக்கும்பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Closure ,ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு