×

வத்தலக்குண்டுவில் தலைமை பண்பு பயிற்சி முகாம்

வத்தலக்குண்டு, ஜன. 8: வத்தலக்குண்டுவில் புதிய தலைமுறை ரோட்டரி சங்கம், ராயல் இன்ட்ராக்ட் கிளப் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு தலைமை பண்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடத்தியது. புதிய தலைமுறை ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் மாதவன் வரவேற்றார். வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். பண்பையும் வளர்க்க வேண்டும் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். எழுத்து பயிற்சி, வாசிக்கும் பயிற்சி அவசியம் கற்று கொள்ள வேண்டும்’ என்றார். மேலும் வாழ்க்கையில் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் இடையூறுகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும், வாழ்க்கையில் மனம் தளர கூடாது சமுதாயத்தில் வெற்றிபெற வேண்டும்

என்றால் எவ்வாறு செயல்பட வேண்டும், சிக்கல் வரும் காலங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தலைமை பண்பு குறித்து சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் 10 பள்ளிகளை சேர்ந்த சுமார் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது நஜிமுதீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். உதவி ஆளுநர் ஜீவானந்தம், பர்ஸ்ட் பள்ளி தாளாளர் கயல்விழி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மரியோன், ரோட்டரி நிர்வாகிகள் பத்மநாராயணன், திருப்பதி, முருகபாண்டியன், கோட்டைப்பட்டி ஊராட்சி செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் காசி நன்றி கூறினார்.

Tags : Leadership Training Camp ,Vattalakundu ,
× RELATED தமிழர்களை அடிக்கடி கேலி செய்த வடமாநில...