×

அரசு நிதியுதவியுடன் மனவளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லம் பயன்பெற அழைப்பு

திண்டுக்கல், ஜன. 8: மனவளர்ச்சி குன்றியோர் அரசு நிதியுதவியுடன் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் சேர்த்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் துவங்கி செயல்படுத்தி வருகிறது. இம்மையத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களை சேர்த்து அவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சி அளிப்பதுடன், இலவச உணவுடன், தங்கும் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் துய வளானார் மேம்பாட்டு அறகட்டளை மூலம் நடப்பு ஆண்டு புதியதாக புதுவிடியல் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் நிலகோட்டை வட்டம் முருகதூரான்பட்டியில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே திண்டுக்கல் கூட்டுறவு நகரில், அம்மா இல்லம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் நிலகோட்டை திரவியம் நகரில் இனிய உதயம் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் துவங்கப்பட்டு செயல்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களை தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் சேர்த்து பயன்பெற விரும்பும் மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (0451-2460099 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது நேரில்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்