×

இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். தலைவர் பதவியை பிடிக்க அதிமுக ஒன்றிய செயலாளருடன் மல்லுக்கட்டும் அமைச்சர் ஆதரவாளர்

ராசிபுரம். ஜன.8: வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க அதிமுகவினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் 10 வார்டுகளை கொண்டதாகும். இதில்,6 வார்டுகளை அதிமுகவும், 4 வார்டுகளை திமுகவும் கைப்பற்றியுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் தாமோதரன் 4வது வார்டில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட் திமுக ஒன்றிய செயலாளர் துரைசாமி 2655 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாமோதரனுக்கு 1780 ஓட்டுகள் கிடைத்தது. இவர் உள்ளாட்சித் தேர்தலில் நின்று இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்றார்.

இருந்தும் அதிமுகவின் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 6 பேர் தேர்வாகிய நிலையில் அக்கட்சியில் இருந்து தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் சில உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்களாவும், சில உறுப்பினர்கள் மாற்று அணியிலும் உள்ளதாக தெரிகிறது. ஒன்றிய செயலாளர் தான் நினைத்த ஒருவரை ஒன்றியக்குழு தலைவராக்க காய் நகர்த்தி வரும் நிலையில், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சரோஜாவின் ஆதரவாளர் ஒருவர் வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றதும் சிலரை தனியாக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இதில், ஒன்றிய செயலாளரின் கை ஓங்குமா அல்லது அமைச்சரின் நிழலாக செயல்படும் காண்டிராக்டரின் எண்ணம் கைகூடுமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.

திருச்செங்கோட்டில்
₹10 லட்சத்திற்கு எள்,  பருத்தி விற்பனைதிருச்செங்கோடு, ஜன.8: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர்  முறையில் நடந்தது. இதில் சின்னசேலம், ஆத்தூர் , கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களை கொண்டு  வந்து குவித்தனர். 25 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. கொள்முதலுக்காக பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி மற்றும் ஈரோடு பகுதிகளைச்  சேர்ந்த சுமார் 30 வியாபாரிகள் வந்திருந்தனர். ரகசிய டெண்டர் முறையில் ₹1.50  லட்சத்திற்கு எள் விற்பனையானது.சிவப்பு ரகம் கிலோ ₹75.10 முதல் ₹119.90 வரையிலும், வெள்ளை ரகம் கிலோ ₹89.40  முதல் ₹100.60  வரையிலும் ஏலம் போனது. இதேபோல், 500 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. பிடி ரகம் குவிண்டால் ₹4139 முதல் ₹5195 வரையிலும் விலை போனது. ஆகமொத்தம் எள், பருத்தி விற்பனையின் மூலம் ₹10 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Megaraj ,supporter ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...