×

வெண்ணந்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ராசிபுரம், ஜன.8: வெண்ணந்தூரில் நடத்திய சோதனையில் விதி மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக கடைக்காரர்களிடம் ₹2,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் வணிக கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதாக சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜூக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கனகராஜ் அப்பகுதியில் ஆய்வு செய்யும்படி  வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதாவிற்கு உத்தரவிட்டார். இதன்பேரில், அலுவலக பணியாளர்கள் பரப்புரையாளர்களை கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 1300 கிராம் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் ₹2,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து வணிக நிறுவனத்தினர் மற்றும் பொருட்கள் உபயோகிப்பவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக மக்கும் தன்மை கொண்ட மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்