×

லாரிகள் இன்று வழக்கம் போல ஓடும்

நாமக்கல், ஜன.8: தமிழகத்தில் இன்று(8ம் தேதி) வழக்கம்போல் லாரிகள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று(8ம்தேதி) மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் லாரிகள் வழக்கம்போல் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறுகையில், போராட்டத்தில் ஈடுபடும் மத்திய தொழிற்சங்கங்கள் எங்களை அழைக்கவில்லை. ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, வழக்கம்போல் லாரிகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்