×

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜன.8: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, சிங்களாந்தபுரம், காரவள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மரவள்ளி சாகுபடி செய்துள்ளன. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்லப்பம்பட்டி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு ஜவ்வரிசி தயாரிப்பதற்காக அனுப்பி வைக்கின்றனர். சேகோ ஆலைகளில் மாவுசத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மரவள்ளி டன் ₹7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது, 1000 ரூபாய் அதிகரித்து ₹8 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது. சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ₹8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது, 1000 ரூபாய் விலை உயர்ந்து ₹9000க்கு விற்பனையாகி வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி கிழங்கு விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தொpவித்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED சூறைக்காற்றுடன் கனமழை