×

பள்ளிபாளையத்தில் பழைய புரோட்டாவை பதப்படுத்தி விற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி

பள்ளிபாளையம், ஜன.8: பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்ப்பட்ட பிளாஷ்டிக் கேரி பேக்குகள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆணையாளர் இளவரசன் மற்றும் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 22.5 கிலோ பிளாஷ்டிக் கேரி பேக்குகளை அதிகாரிகளை கைப்பற்றி கடையின் உரிமையாளர்களை எச்சரிக்கை விடுத்தனர். திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ள பிரிட்ஜை திறந்த அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

உள்ளே 10 கிலோ அளவுக்கு புரோட்டாக்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. முதல் நாள் மீந்து போன புரோட்டா மற்றும் குழம்புகளை பிரிட்ஜில் வைத்துவிட்டு அடுத்த நாள் அவற்றை சூடுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார். இதனைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரிகள், புரோட்டா மற்றும் பழைய குழம்புகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொட்டினர். இது போல் நாள் பட்ட உணவு பொருட்ளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு ₹2500 அபராதம் விதித்தனர். மேலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வைத்திருந்த 10 கடைக்காரர்களுக்கு ₹15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி