×

நாமக்கல் பகுதியில் பகல் வெப்பம் உயர்ந்து காணப்படும்

நாமக்கல், ஜன.8: நாமக்கல் பகுதியில், பகல் வெப்பம்  உயர்ந்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடுத்த 3  நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் முதல் நாள் மேகமூட்டத்துடனும் பின் லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும். லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் சற்று உயர்ந்து காணப்படும். இந்த வானிலையில் கோழிகளில் குறிப்பாக இளம் கோழிகளில் நல்ல தீவன எடுப்பு இருக்கும். அதற்கெற்றாற்போல் தீவன மேலாண்மையை செம்மைப்படுத்தியும் 4 வாரங்களுக்கு ஒரு முறை உடல் எடையை கொண்டு முடிவுகளை தெரிந்து கொண்டு மாற்றங்களை பின்பற்றியும் நல்ல முறையில் கோழிகளை முட்டை பருவத்திற்கு தயார்படுத்த வேண்டும். இதனால், முட்டை பருவத்தில் அதிக எடையுடன், அதிக எண்ணிக்கையில் முட்டைகளை பெறலாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : region ,Namakkal ,
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்