×

போந்தவாக்கம் கிராமத்தில் ரஜினி மன்றம் சார்பில் அரசு பள்ளி சீரமைப்பு

ஊத்துக்கோட்டை, ஜன. 8: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 520 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.  இங்குள்ள வகுப்பறைகளில் ஒரு வகுப்பறை பழுதடைந்து காணப்பட்டது. இந்த வகுப்பறையை ரஜினி மன்றத்தின் சார்பில் ₹2 லட்சம்  செலவில் சீரமைக்கப்பட்டது.சீரமைக்கப்பட்ட  வகுப்பறையை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்  சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.பூண்டி ஒன்றிய செயலாளர் ஏ.ஆர். ஸ்ரீபாஷ்யம், மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.சி.சேகர், துணைச்செயலாளர்கள் வெங்கட்முனிவேல், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டு சீரமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் சுனில் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சந்திரகுமார் மற்றும் பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Government School ,Rajini Hall ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...