×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம், ஜன.8: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் காஞ்சி தொகுதி செயலாளர் டேவிட், எஸ்டிபிஐ கட்சி ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, திமுக எம்பி ஜி.செல்வம், எஸ்டிபிஐ நிர்வாகி முகமது உசேன் தமிழக வாழ்வுரிமை கட்சி துணை செயலாளர் தீனன், மக்கள் மன்றம் மகேஷ், ஐந்திணை கலை பண்பாட்டு இயக்கம் காஞ்சி அமுதன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் டிஏஜி அசோகன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் மதியழகன், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தின்மூலம் தேசிய குடிமக்கள் ஆவணம், தேசிய குடிமக்கள் பதிவு என்ற பெயரில் மத்திய அரசு ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணிக்கிறது. இதன்மூலம் அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை பறித்து, மத - இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டது. இறுதியாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : group ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.