×

கூவத்தூர் அருகே வடப்பட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானம் விற்பனை: கலெக்டரிடம் இளைஞர்கள் புகார்

செங்கல்பட்டு, ஜன.8: கள்ளச் சாராயத்தை ஒழிக்கக்கோரி வடப்பட்டினம் கிராம இளைஞர்கள், செங்கல்பட்டு கலெக்டர்   ஜான்லூயிசிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செய்யூர் தாலுகா கூவத்தூர் வடப்பட்டினம் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக போலி மதுபானம் தயார் செய்தும், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில மதுபானங்கள் கடத்தி வந்து சிலர், கூடுதல் விலைக்கு அமோக விற்பனை செய்கின்றனர். வடப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், துரைராஜ், தேவேந்திரன், நதியா என்ற பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கள்ளச்சந்தையில் 24 மணிநேரமும் போலி மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து கூவத்தூர் போலீசில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், போலீசார் கையூட்டு பெற்றுக் கொண்டு சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். இதனால், அந்த பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்கள், இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். போலி மதுபானத்தை குடித்து பல ஆண்கள் இறந்து போனதால், பல பெண்கள் சிறு வயதிலேயே கணவனை இழந்தது குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பாக, ஊர்க்கூட்டம் நடத்தி, அதில் முடிவெடுத்து தடுக்க முயற்சி எடுத்தால், நாங்கள் போலீசுக்கு மாமூல் கட்டித்தான் வியாபாரம் செய்கிறோம் என ஆணவமாக பேசுவதுடன், போலீசாரை வைத்து மிரட்டுகிறார்கள். கிராமத்தில் நடக்கும் தொடர் உயிர் பலியை தடுக்க போலி மது விற்பனையை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : village ,Vadapattinam ,Collector ,Kovathoor ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...