×

மாதா சிலை திருட்டு

சென்னை: சூளைமேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வீட்டின் முன்பு அமைத்திருந்த மாதா சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூளைமேடு மங்கல்நகரை சேர்ந்தவர் நாதன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இவர், அதே பகுதியில் கிறிஸ்துவ சமூக நிதி பேரவை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன்பு 2 அடி உயர் கொண்ட மாதா சிலை அமைத்து தினமும் வழிபாடு செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் முன்பு வைத்திருந்த இந்த மாதா சிலையை நேற்று முன்தினம் வழிபாடு செய்ய நாதன் வந்தபோது, சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் நாதன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மாதா சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Theft ,Mata ,
× RELATED 509 ஆண்டுகள் பழமையான புனித மகிமை மாதா திருத்தல பெருவிழா