×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் தகுதியான 109 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

வேலூர், ஜன.8: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் தகுதியான 109 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட அதிகாரி பாபு வழங்கினார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2வது செவ்வாய்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு டாக்டர்கள் மூலம் பரிசோதனைகள் செய்து அரசு சார்பில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்ைக அறிவதோடு அவர்களுக்கு அரசு சலுகைகள் தடையின்றி எளிதில் கிடைக்கச்செய்யவும் வாய்ப்பாக அமைகிறது.

அதன்படி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் 5க்கும் மேற்பட்ட சிறப்பு டாக்டர்கள் குழுவினர் கலந்துக் கொண்டு பரிசோதனைகள் செய்தனர். இறுதியில் தகுதியான 109 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு வழங்கினார்.

Tags : camp ,Vellore Collector ,Office ,
× RELATED அரசியல் கட்சி மறைந்த தலைவர்களின்...