×

காட்பாடியில் சுற்றித்திரிந்த 7 சிறுவர்கள் மீட்பு

வேலூர், ஜன.8: காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 7 சிறுவர்களை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குடும்பச்சூழல், வறுமை நிலை, கல்வி மீதான வெறுப்பு போன்ற காரணங்களால் இளம் சிறார்கள் வீட்டில் இருந்து வெளியேறி விடுகின்றனர். ரயில், பஸ் மூலமாக வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று ஆதரவின்றி சுற்றித்திரிகின்றனர். இதுபோன்று சுற்றித்திரியும் சிறுவர்களை அடையாளம் காணும் சமூக விரோத கும்பல்கள் அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவது மத்திய குற்ற புலணாய்வு பிரிவு விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறும் சிறுவர்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆப்ரேஷன் முஷ்கான் திட்டம் தொடங்கப்பட்டது.

அந்தந்த மாநில போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பெற்றோருடன் செல்ல மறுக்கும் சிறுவர்களுக்கு காப்பகத்திலேயே கல்வி கற்கும் வசதி அல்லது சுயதொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை ஆதரவின்றி சுற்றித்திரிந்த 7 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த விஜய்(14), குப்பம் மண்டலத்தை சேர்ந்த தரணி(14), மனோஜ்குமார்(14), கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கரி கிராமத்தை சேர்ந்த முனியப்பன்(16).

பீகார் மாநிலத்தை சேர்ந்த அன்சார்(12), சந்தோ அன்சார்(7), பிரவேஷ் அன்சார்(14) ஆகியோரை மீட்டு காட்பாடியில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுவர்கள் மீட்கப்பட்டது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : boys ,forest ,
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...