×

உள்ளாட்சி தேர்தலில் பணப்புழக்கம் கண்டித்து போலி ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்து விவசாயிகள் போராட்டம்

செய்யாறு, ஜன.8:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பிடிஓ அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்திருந்த விவசாயிகள், முன்னதாக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 35வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பணத்தை வாரி இறைத்து தான் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் எவ்வாறு உள்ளாட்சி நிர்வாகத்தில் திறம்பட செயல்படுவார்கள். கொட்டிய பணத்தை வாரவே பதவிக்கு வருகிறார்கள் என தெரிவித்ததுடன், போலி ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கிராம சபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடையில்லாமல் ஒத்துழைப்பு அளித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். 100 நாள் திட்ட பணிகளை, விவசாயித்திற்கு உறுதி செய்யும் பட்சத்தில், கிராம பொருளாதாரம் பன்மடங்கு உயரும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அறிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...