×

மத்திய அரசை கண்டித்து 16 இடங்களில் இன்று மறியல்

விழுப்புரம், ஜன. 8:  விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்தராஜ், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, தொலை தொடர்பு, வங்கி, காப்பீட்டுத்துறை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்தும். பொதுவிநியோகத்திட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். 250 நாட்கள் தேசிய ஊரக வேலை வழங்கிட வேண்டும். ரூ.600 கூலி உயர்த்தி வழங்கிடவும், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று (8ம் தேதி) வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் மறியல் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : places ,country ,government ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!