×

வார்டுகளில் கட்சிகளின் தற்போதைய நிலவரம்

மேல்புறம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 வார்டுகளில் திமுக-1, காங்கிரஸ்-4, இந்திய கம்யூனிஸ்ட்-1, மார்க்சிஸ்ட் 3 என்று திமுக கூட்டணி வசம் 9 வார்டுகள் உள்ளன. இதனால் திமுக கூட்டணி தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை உள்ளது. இங்கு சுயேட்சை ஒன்றும், பாஜ 2 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளது. இங்கு மின்னணு வாக்குபதிவு நடைபெற்றிருந்தது. குருந்தன்கோடு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 11 வார்டுகளில் திமுக 1, காங்கிரஸ் 2 என்று கூட்டணி 3 இடங்களிலும், அதிமுக 1, பாஜ 4 என்று கூட்டணி ஐந்து இடங்களிலும், சுயேட்சை இரு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். எனவே தற்போது சுயேட்சைகள் ஆதரவு பெறும் அணி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. கணியாகுளம் ஊராட்சியில் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏஞ்சலின் ஷரோணா வெற்றி பெற்றுள்ளார்.

Tags : parties ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...