×

காஞ்சி மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.7: காஞ்சிபுரம்  கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடந்தது.  இதில் முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள், கல்வி,திருமணம் ஆகிய உதவித்தொகைகள், வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறுல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை,  கொடிநாள் நிதி வசூலாக 3 லட்சத்து 56 ஆயிரத்து 500க்கான காசோலைகளை பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலெக்டரிடம் வழங்கினா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கெலக்டர் சரவணன், திட்ட அலுவலர் தர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாலதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேலு, மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பொன்னையா, சப் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்பட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வேட்டி அணிந்து வந்தனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி கலையரங்க கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள், கல்வி, திருமணம் ஆகிய உதவித்தொகைகள், வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கேரிக்கைகள் அடங்கிய 210 மனுக்களை பெற்றார். இதில் மதுராந்தகம் கோட்டம், சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 9 பேரது வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் சாலை விபத்து நிவாரண தொகை 7.5 லட்சம், செய்யூர் வட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், விதவை, முதியோர் ஆகியோருக்கு உதவித்தொகை ஆணை, மதுராந்தகம் வட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பேருக்கு மாற்றுத் திறனாளிகள், விதவை உதவித்தொகை ஆணை ஆகியவை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமாரி, செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchi ,district ,
× RELATED கருடன் கருணை