×

கலசபாக்கம் அருகே வீடு புகுந்து திருடியவனை விரட்டி பிடித்த பொதுமக்கள்

கலசபாக்கம், ஜன.7: கலசபாக்கம் அருகே வீடு புகுந்து திருடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கலசபாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி(48), இவரது மனைவி கல்யாணி, மகன் வீரபத்திரன், வீரபத்திரனின் மனைவி சாந்தி, இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றனர். அப்போது, சாந்தி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர், வீட்டிற்கு சென்று பார்த்தப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவசரமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மர்ம ஆசாமி ஒருவர் கம்பல், செயின், ₹10 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றதை பார்த்த சாந்தி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.

இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து, தப்பிக்க முயன்ற வாலிபரை பிடித்து கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த நவாப் என்பவர் வீட்டில் மர்ம ஆசாமி ஒருவர் சுவர் ஏறி குதிப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து அவரை துரத்தி பிடிப்பதற்கு முன்பு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘காரில் 4 வாலிபர்கள் வந்தனர். இதில் ஒருவர் அருணகிரி விட்டிற்கும், மற்றொருவர் நவாப்பின் வீட்டிற்கும் திருட சென்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் அதிகாரி போல், கிராமத்தில் வலம் வந்தனர்.நேற்று உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கான பதவி ஏற்பு என்பதால் அதிகாரிகள் வந்தனர் என்று நினைத்திருந்தோம். ஆனால், வந்தவர்கள் திருடர்கள் கூட்டம் என்பது பிறகு தான் தெரியவந்தது’ என்றனர். இதுகுறித்து, கலசபாக்கம் போலீசார் கூறுகையில், ‘இது தொடர்பாக புகார் வந்த பிறகு வழக்குப்பதிவு செய்யப்படும். பொதுமக்கள் பிடித்து வைத்த வாலிபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Civilians ,Kalasakkam ,house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி