×

ஜே.என்.யு பல்கலை.யில் நடந்த வன்முறை சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.7:  டெல்லி ேஜ.என்.யூ பல்கலைக் கழகத்தில் நேற்று முகமூடி அணிந்த சிலர் பல்கலைக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.  இச்சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களை தாக்கிய மர்மநபர்களை கைது செய்யக்கோரியும் திருச்சி மாநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன முழக்கப் போராட்டம் நேற்று மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Protest ,JNU University ,
× RELATED பெரியமாரியம்மன் வீதி உலாவிற்கு தடை...