×

மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு

மன்னார்குடி, ஜன. 7: மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவின் போது திமுக உறுப்பினர்கள் தனி அணியாக வந்து ஆணையர் அறையில் பதவியேற்கும் போது அதிமுக திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. பிரச்னைகளை சமாளிக்க எஸ்பி தலைமையில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர். மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த 27 ம் தேதி நடத்தப்பட்டு 2 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 22 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 10, பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் திமுக 9, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக அதிமுக இரு அணி களும் தலா 11 இடங்களில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளது. இந்நிலையில், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று காலை பதவியேற்பு விழா மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் ஞானம் வரவேற்றார். அதிமுக வை சேர்ந்த அப்பு (எ) ஜெயக்குமார் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதலில் பதவி ஏற்றுக் கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் அதிமுகவை சேர்ந்த 12 வது வார்டு கவுன்சிலர் சேரன்குளம் மனோகரன், 13 வது வார்டு கவுன்சிலர் அசேஷம் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 வது வார்டு கவுன்சிலர் வனிதா அருள்ராஜன், பூபதி உள்ளிட்ட 10 பேர் பதவியேற்று கொண்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் பதவியேற்க வரவில்லை. இதனால் பதவியேற்பு விழா முடிவடைந்தாக அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வந்த திமுக உறுப்பினர்களை தனது அறையில் வந்து பதவியேற்று கொள்ளுமாறு ஆணையர் ஞானம் கூறினார். அதன்படி 17 வது வார்டு கவுன்சிலர் பாரதிமோகன், 21 வது வார்டு கவுன்சிலர் அருள்மொழி உள்ளிட்ட 8 திமுக உறுப்பினர்கள் ஆணையர் அறைக்கு வந்த போது 11 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்னர் வருபவர்களை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது என்று அதிமுக ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சேரன்குளம் மனோகரன் ஆகியோர் ஆணையரிடம் முறையிட்டனர். அதற்கு திமுக ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ், முன்னாள் மாவ ட்ட ஊராட்சி துணை தலைவர் பரவை முத்துவேல், மாவட்ட பிரதிநிதி பாசறை ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நாள் முழுவதும் பதவியேற்கலாம் என்று பிடிஓவிடம் கூறினார்கள். இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் ஆணையர் அறைக்கு வந்து உள்ளே இருப்பவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அதன் பின்னர் நீண்ட போராட்டத் திற்கு பிறகு திமுக உறுப்பினர்கள் ஆணையர் அறைக்குள் பதவியேற்று கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி )கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தேர்தலுக்கு நடைபெறுவதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை ஏஜெண்ட் அடை யாள அட்டை வழங்கும் போது இதே ஆணையர் அறையில் பொது சொத் துக்கு சேதம் விளைவித்ததாக பிடிஓவால் புகார் கொடுக்கப்பட்ட திமுக வை சேர்ந்த கிழக்கு ஒன்றிய செயலாளரும், 4வது வார்டு ஒன்றியக்குழு கவுன் சிலராக தேர்ந் தெடுக்கப்பட்ட ஐ.வி.குமரேசனை தவிர மற்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத் தினால் பின்னொரு நாளில் பதவியேற்றுக் கொள்வதாக திமுகவை சேர்ந்த அரிச்சபுரம் செல்வம் என்பவர் மூலம் ஆணையர் ஞானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தை ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவல ரும் ஏற்று கொண்டனர். மன்னார்குடி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவியேற்பில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக மாவட்ட எஸ்பி. துரை தலைமையிலான அதிரடிப்படை போலீசார் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் கலைந்து போக கூறினர். அதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த அவர்களது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் பதற்றம் நிலவியது.

Tags : Mannargudi ,union committee members ,AIADMK ,DMK ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...