புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு ெபாங்கல் பரிசு வழங்கப்படும்

புதுக்கோட்டை, ஜன.7: புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் அர்பன் கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பண்டிகையையட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலையினை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் முதல் வரும் 13.1.2020 வரை அனைத்து நாட்களிலும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளில் குடும்பஅட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 53 ஆயிரத்து 340 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதுடன், ரூ. ஆயிரம் ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும், இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மலைக்குடிப்பட்டி நியாயவிலைக்கடையிலும், விராலிமலை நியாயவிலைக்கடையிலும் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.

Tags : Pudukkottai district ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...