×

அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கல்

அரியலூர், ஜன. 7: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடநூல், குறிப்பேடு மற்றும் நலத்திட்ட பொருட்களை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் வழங்கினார்.
இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் செல்வி, இடைநிலை ஆசிரியர் எழில் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags : season ,government school children ,
× RELATED கொரோனாவால் சீசன் துவங்கியும் ‘வெறிச்’ கொடைக்கானலில் கொண்டாட்டம் ‘கட்’